கூலிம், அக்டோபர்-14, கெடா, கூலிமில் உள்ள செடிம் நீர்வீழ்ச்சியில் நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்த 31 வயது ஆடவர் நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாமென அஞ்சப்படுகிறது.
நேற்று மாலை 5 மணியளவில் அச்சம்பவம் நிகழ்ந்தது.
சம்பவ இடத்தில் வானிலை நன்றாக இருந்த போதும், ஆற்றெதிரே மழைப் பெய்ததால் ஆற்று நீர் பெருக்கெடுத்து ஓடி அவ்வாடவர் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என தீயணைப்பு மீட்புத் துறை கூறியது.
அவரைத் தேடும் பணிகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அந்த நண்பர்கள் குழு பினாங்கிலிருந்து வந்ததாகத் தெரிய வருகிறது.