கோலாலம்பூர், பிப் 23 – 2022 -லிருந்து 2025- ஆம் ஆண்டு வரையிலான கெஅடிலான் கட்சியின் தேர்தல் புதிய தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
கிளை நிலையிலான இளைஞர்- மகளிர் அணியிலான பொறுப்புகள் உட்பட அனைத்து பதவிகளுக்கான கட்சித் தேர்தல் மே 13-ஆம் தேதியிலிருந்து மே 18 –ஆம் தேதி வரையில் நடைபெறுமென அக்கட்சியின் தலைமைச் செயலாளர் Datuk Seri Saifuddin Nasution Ismail கூறியுள்ளார்.