Latestமலேசியா

கெடாவில் இறால் வளர்ப்பு குளத்தில் மூழ்கி 5,3 வயது சிறுவர்கள் மரணம்

சுங்கை பட்டாணி, நவ 2 – கெடா, சுங்கை பட்டாணி, கோத்தா கோலா மூடாவில் இறால் வளர்ப்பு குளத்தில் மூழ்கி 5 மற்றும் 3 வயது சிறுவர்கள் மரணம் அடைந்துள்ளனர்.

வீட்டுக்கு அருகே உள்ள இறால் வளர்ப்பு குளத்தில் 5 வயது சிறுவனின் தந்தை வேலை செய்து வரும் நிலையில், அங்கு விளையாடும் கொண்டிருந்த அவ்விரு சிறுவர்களும் திடிரென காணாமல் போயுள்ளனர்.

மதியம் 2 மணியளவில் அவர்கள் காணவில்லை என்பதை உணர்ந்த பெற்றோர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் தேடும் நடவடிக்கையில் ஈடுபட்ட போது, இறால் பிடிக்க போடப்பட்டிருந்த வலையில் அவ்விருவரின் உடல்களும் சிக்கி கொண்டிருப்பதை கண்டுள்ளனர்.

அச்சிறுவர்கள் இருவரின் உடல்களும் உடனடியாக அருகிலுள்ள கிளினிக்கிற்கு கொண்டு சென்ற போதிலும் அவர்கள் இறந்து விட்டதை மருத்துவர்கள் உறுதிபடுத்தினர்.

இதுகுறித்த தகவல் கிடைத்த போலிசார் அவர்களின் உடல் சுல்தானா பாஹியா மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனை நடவடிக்கைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர்.

3 வயது சிறுவன் மற்றொரு சிறுவனின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!