Latestமலேசியா

கெடாவில் இவ்வாண்டு இதுவரை எலி சிறுநீர் தொடர்பான 105 தொற்று சம்பவங்கள் – ஒருவர் மரணம்

அலோஸ்டார், ஜூன் 21 – கெடாவில் இவ்வாண்டு ஜனவரி முதல் ஜூன் 8ஆம் தேதிவரை leptospirosis எனப்படும் எலி சிறுநீர் தொற்று தொடர்பான 105 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அந்த தொற்றுக்கு உள்ளானவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கெடா மாநில சுகாதாரத்துறை மேற்கொண்ட இரத்த மற்றும் ஆய்வுக்கூட பரிசோதனை மூலம் எலி சிறுநீர் தொற்று குறித்த சம்பவங்கள் கண்டறியப்பட்டததாக கெடா சுகாதார இயக்குநர் டாக்டர் இஸ்முனி பொஹாரி ( Ismuni Bohari ) கூறினார்.

கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் இந்த தொற்று தொடர்பான 89 சம்பவங்கள் பதிவாகின. 105 சம்பவங்களில் 32 பேர் leptospirosis தொற்றின் பாதிப்புக்கு உள்ளானது உறுதிப்படுத்தப்பட்டது. ஆய்வின் முடிவுக்காக இன்னும் 16 பேர் காத்திருப்பதாகவும் அவர் கூறினார். இந்த தொற்றின் பாதிப்புக்கு உள்ளான ஒருவர் குபாங் பாசு ( Kubang Pasu வட்டாரத்தில் இறந்தார் என டாக்டர் இஸ்முனி பொஹாரி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!