Latestமலேசியா

கெடாவில் கார் கழுவும் கடைப் பணியாளர் படுகொலை; சகோதரர்கள் உட்பட மூவர் மீது குற்றச்சாட்டு

சுங்கை பட்டாணி, ஆகஸ்ட்-29 – கார் கழுவும் கடையொன்றின் பணியாளரைக் கொலைச் செய்ததாக இரு சகோதரர்கள் உள்ளிட்ட 3 ஆடவர்கள் இன்று நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டனர்.

ஆகஸ்ட் 15-ஆம் தேதி அக்குற்றத்தைப் புரிந்ததாக 36 வயது வி.மாதவன், 27 வயது வி.நவின் குமார், 31 வயது ஆர். புவனேஸ்வரன் மீது சுங்கை பட்டாணி மேஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.

அம்மூவரும், இன்னமும் பிடிபடாமல் வெளியிலிருக்கும் மேலும் இரு சந்தேக நபர்களுடன் சேர்ந்து, 28 வயது எஸ். நாரேந்திரனைக் கொலைச் செய்ததாக குற்றச்சாட்டில் கூறப்பட்டது.

ஆகஸ்ட் 15-ல் Taman Bedong Jaya, Snow Car Wash கடையில் அதிகாலை 2.15 மணிக்கும் 2.30 மணிக்கும் இடைப்பட்ட காலத்தில் அக்கொலை நிகழ்ந்துள்ளது.

கொலைக் குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சம் 30 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 12 பிரம்படிகளும் விதிக்கப்படலாம்.

குற்றம் சாட்டப்பட்ட மூவருக்கும் நீதிமன்றம் ஜாமீன் வழங்கவில்லை.

இவ்வேளையில், சுங்கை பட்டாணி செஷன்ஸ் நீதிமன்றத்தில் அம்மூவர் மீதும் மற்றொரு குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டது.

அதே நாளன்று, Bedong, Kampung Toh Pawang-கில் காலியிடத்தில் வைத்து 29 வயது ஜே.டினேஷ் எனும் பாதுகாவலருக்குக் காயம் விளைவித்ததாக அக்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

அக்குற்றத்திற்கு அதிகபட்சமாக 20 ஆண்டுகள் சிறையுடன், அபராதம் அல்லது பிரம்படி விதிக்கப்படலாம்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!