அலோஸ்டார், மே 9 – கெடாவில் Gunung Keriangகில் காணாமல் போனதாகக் கூறப்பட்ட மூன்று பதின்ம வயதினர் தீயணைப்பு வீரர்கள் மற்றும் மலையேறிகளின் உதவியுடன் நேற்றிரவு 8.30 மணியளவில் பாதுகாப்புடன் கண்டுபிடிக்கப்பட்டதாக கெடா தீயணைப்பு மற்றும் மீட்புக்குழுவின் தலைவர் Ahmad Aminudin Abd Rahim தெரிவித்தார்.
மிகவும் சேர்ர்ந்து காணப்பட்ட நிலையில் பாதிக்கப்பட்ட 14 வயதுடைய இரு பெண்களும் மற்றும் 17 வயதுடைய பையனும் மீட்கப்பட்டனர்.
இருண்ட வானிலை காரணமாக பாதிக்கப்பட்டவர்களை கீழே இறக்குவதில் தீயணைப்புத் துறையினர் சிரமங்களை எதிர்நோக்கியதாக Ahmad Aminudin தெரிவித்தார்.
தேடும் நடவடிக்கையின்போது Sultanah Bahiyah மருத்துவமனையின் ஆம்புலன்ஸ், ஒரு தீயணைப்பு வண்டி மற்றும் ஒரு போலீஸ் வாகனம் ஆகியவையும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது.
மேலும், காணாமல்போன மூவரின் நிலையை கண்டறிவதற்காக அவர்களின் குடும்ப உறுப்பினர்களும் அங்கு காத்திருந்தனர்.