அலோஸ்டார், நவ 25 – கெடாவில் தனியார் முதலீடுகளை தோல்வி அடையச் செய்வதற்கு பெரிய சதித் திட்டம் இருப்பதாக அம்மாநில மந்திரிபெசார் டத்தோஸ்ரீ முகமட் சனுசி முகமட் நோர் சட்டமன்றத்தில் குற்றஞ்சாட்டியுள்ளார்.
கெடாவில் முதலீடு செய்ய விரும்பும் நிறுவனங்களுக்கு அழுத்தங்கள் கொடுக்கப்படுவதோடு அறிவிக்கப்பட்ட திட்டங்களை மீட்டுக்கொள்ளும்படியும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
40 பில்லியன் ரிங்கிட்டைக் கொண்ட Langkasuka திட்டத்தை மீட்டுக்கொள்வதற்கு Bin Zayed international குழுமத்தின் நிறுவனம் முடிவு செய்ததை ஒரு முன்னுதாராணமான சனுசி சுட்டிக்காட்டினார். இதற்கான காரணத்தை அவர் விவரிக்கவில்லை.
கெடாவில் உள்ள நிறுவனங்களுக்கு இருந்துவரும் அழுத்தம், பல்வேறு வகையான கட்டுப்பாடுகள் மற்றும் குறிப்பிட்ட சிக்கல்களுக்கு உட்பட்டவை என்றும் தனக்குத் தெரியும் என சனுசி கூறினார்.
எனினும் இது குறித்து தாம் விவரிக்க விரும்வில்லையென கோத்தா டாருல் அமான் பக்காத்தான் ஹராப்பான் சட்டமன்ற உறுப்பினர் Teh Swee Leong எழுப்பிய வாய்மொழி கேள்விக்கு பதில் அளித்தபோது சனுசி இத்தகவலை வெளியிட்டார்.