அலோஸ்டார், பிப் 22 – கெடாவில் திடீர் தேர்தல் நடத்தப்படும் சாத்தியம் இல்லை. மாநில மந்திரிபெசார் டத்தோஸ்ரீ Muhamad Sanusi Md Nor தலைமைத்துவத்திற்கு பெரிக்காத்தான் நேசனல் உறுப்புக் கட்சிகள் வலுவான ஆதரவை வழங்கி வருவதால் தேர்தல் நடைபெறும் பேச்சுக்கே இடமில்லையென குவா சட்டமன்ற உறுப்பினர் Mohd Firdaus தெரவித்தார்.
பாஸ் கட்சியைச் சேர்ந்த 15 சட்டமன்ற உறுப்பினர்களும், பெர்சத்துவின் ஆறு சட்டமன்ற உறுப்பினர்களுடன் அம்னோவின் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களும் கெடா அரசாங்கத்திற்கு ஆதரவை வழங்கி வருவதாக மாநில ஆட்சிக்குழு உறுப்பினருமான Mohd Firdaus தெரிவித்தார்.