Latestமலேசியா

கெடாவில் நான்கு இலக்க பிளேக் மார்க்கேட் அதிகரிக்கும்

நான்கு இலக்க எண் லாட்டரி டிக்கெட்டுக்கான லைசென்ஸ்களை புதுப்பிப்பதில்லை என்ற முடிவில் கெடா அரசாங்கம் உறுதியாக இருக்குமானால் அந்த மாநிலத்தில் பிளேக் மார்க்கெட் எனப்படும் கருப்புச் சந்தையில் நான்கு இலக்க எண் டிக்கெட் விற்பனை அதிகரிக்கும் என குற்றவியல் நிபுணர் டத்தோ டாக்டர் பி.சுந்தரமூத்தி தெரிவித்திருக்கிறார். பிளேக் மார்க்கெட்டில் நான்கு இலக்க எண் எழுதுவோருக்கு கூடுதல் ரொக்கத் தொகை வழங்கப்படுவதால் ஏற்கனவே அதிகமானோர் பிளேக் மார்க்கெட்டில் நான்கு இலக்க எண் டிக்கெட் எழுதுகின்றனர்.

பிளேக் மார்க்கெட்டில் நான்கு இலக்கம் எண்களை எழுதுவோர் உயர் தொழிற்நுட்பத்தோடு செயல்பட்டு வருகின்றனர். மேலும் கள்ளச் சந்தையில் செயல்படும் நான்கு இலக்க விற்பனையை தடுப்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. கை தொலைபேசி, சமூக வலைத்தளங்கள் மூலம் அதற்கான விற்பனை மிகவும் விரைவாகவும் திட்டமிட்ட வகையில் நடைபெறுகிறது. மொத்தத்தில் சட்டப்பூர்வமான நான்கு இலக்க எண் மூலம் கிடைக்கப்பெறும் வரி வருமானத்தை கெடா இழக்கவிருப்பதாக மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!