Latestமலேசியா

கெடாவில் பெரிக்காத்தான் நேசனல் உறுப்புக் கட்சிகளிடையே தொகுதி பங்கீடு பேச்சுக்கு தீர்வு காணப்பட்டன

கோலாலம்பூர். மே 19 – கெடாவில் பெரிக்காத்தான் நேசனல் உறுப்புக் கட்சிகளுக்கிடையே தொகுதி பங்கீடு குறித்த பேச்சுக்களுக்கு தீர்வு காணப்பட்டு விட்டதாக அம்மாநில மந்திரிபுசார் Muhammad Sanusi தெரிவித்துள்ளார்.

மாநில தேர்தல்கள் கடுமையாக இருந்தாலும் கெடா, கிளந்தான்,திரெங்கானு ஆகிய மூன்று மாநிலங்களின் அரசாங்கத்தை பெரிக்காத்தான நேசனல் கைப்பற்றும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இதனிடையே ஜூன் 18 ஆம் தேதிக்குப் பிறகு கெடா மாநில சட்டமன்றம் கலைக்கப்படும் அல்லது ஜூன் மாதத்தில் கடைசியில் கலைக்கப்படலாம் என Muhammad Sanusi கூறியுள்ளார்.

சட்டமன்றத்தை கலைப்பதற்கான பொருத்தமான தேதியை கெடா சுல்தானிடம் தாம் பரிந்துரைக்கவிருப்பதாக அவர் தெரிவித்திருக்கிறார்.

கெடா சுல்தானின் பிறந்த நாள் ஜூன் 18ஆம் தேதி கொண்டாடப்படவிருப்பதால் அந்த தேதிக்குப் பிறகு சட்டமன்றம் கலைக்கப்படலாம் என Muhammad Sanusi கோடிகாட்டியிருக்கின்றார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!