அலோர் செட்டார், செப்டம்பர் 30 – கெடாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று காலை 8 மணி நிலவரப்படி, 463 குடும்பங்களைச் சேர்ந்த 1,359 பேராகத் தொடர்ந்து அதிகரித்துள்ளது.
இந்த எண்ணிக்கை நேற்று 293 குடும்பங்களைச் சேர்ந்த 917 பேராக இருந்தது என சமூக நலத்துறை தெரிவித்திருக்கிறது.
இந்நிலையில் கெடாவில் கூடுதலாக, மூன்று வெள்ள நிவாரண மையங்கள் திறக்கப்பட்டு, மொத்தமாக 11 மையங்கள் செயல்பட்டு வருகின்றன.