அலோர் ஸ்டார், செப்டம்பர் -20, கெடாவில் வெள்ள நிலைமை மோசமடைந்துள்ளது.
இன்று காலை மணி 7.30 வரைக்குமான தகவலின் படி, 36 தற்காலிக நிவாரண மையங்களில் (PPS) மொத்தமாக 6,087 பேர் தங்கியுள்ளனர்.
அவர்கள் 7 மாவட்டங்களைச் சேர்ந்த 1,942 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
நேற்றிரவு 11 மணியளவில் அவ்வெண்ணிக்கை 5,483 பேராக மட்டுமே இருந்தது.
அதிகரித்து வரும் எண்ணிக்கையைச் சமாளிக்க புதிதாக 3 PPS மையங்கள் திறக்கப்பட்டுள்ளன.
கோத்தா ஸ்டார், குபாங் பாசு, போக்கோக் செனா, பெண்டாங், குவாலா மூடா, பண்டார் பஹாரு, கூலிம் ஆகியவையே பாதிக்கப்பட்ட மாவட்டங்களாகும்.
இவ்வேளையில் கோத்தா ஸ்டார் மாவட்டத்தில் மூன்றும், குபாங் பாசுவில் மூன்றுமாக மொத்தம் 6 ஆறுகளில் நீர் மட்டம் இன்னமும் அபாய கட்டத்திற்கு மேலேயே இருப்பதாக info banjir இணையத்தளம் தெரிவிக்கிறது.