கோலாலம்பூர், ஜன 2 -பிரேக் இல்லாமல் மிகவும் மோசமான நிலையில் தனது பிள்ளைகளை ஏற்றிச் சென்ற மோட்டார் சைக்கிளோட்டி ஒருவரின் சிரமத்தை உணர்ந்து அந்த மோட்டார் சைக்கிளுக்கு பிரேக் பொருத்தியேதோடு அதனை செர்விஸ் (service) செய்வதற்கான செலவுகளை ஏற்றுக்கொண்ட போலீஸ்காரர்களின் மனிதாபிமான நடவடிக்கைக்கு நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர். கெடாவில் Kepala Batas- சிற்கு அருகே சாலையில் சிவப்பு எச்சரிக்கை விளக்குப் பகுதியில் அந்த மோட்டார் சைக்கிளோட்டியை தடுத்து நிறுத்தியதை TikTok -இல் @zukiy3044 என்பவரால் பகிரப்பட்ட வீடியோவில் காணமுடிந்தது. அந்த மோட்டார் சைக்கிள் மிகவும் மோசமாக இருப்பதோடு போக்குவரத்து விதி மீறலுக்கு பாதிப்பாக இருப்பதையும் அந்த வீடியோவில் பார்க்க முடிந்தது. நிதி நெருக்கினால் தனது மோட்டார் சைக்கிளின் பிரேக் பழுதானதை சரிசெய்ய முடியவில்லை என்று அந்த மோட்டார் சைக்கிளோட்டி போலீஸ்காரர்களிடம் ஒப்புக் கொண்டுளார்.
இதனைத் தொடர்ந்து அந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநருக்கு அபராதம் விதிப்பதற்கு பதிலாக மனிதாபிமான ரீதியில் உதவி செய்யும் முடிவை போலீஸ்காரர்கள் எடுத்தனர்.
சம்பந்தப்பட்ட நபரின் மோட்டார் சைக்கிளை அருகிலுள்ள மோட்டார் சைக்கிள் பழுதுபார்க்கும் கடைக்கு எடுத்துச் சென்று அதனை பழுதுபார்க்கும் பணிக்கான செலவுக்குரிய பணத்தையும் போலீஸ்காரர்களே வழங்குகினர். அந்த நபருக்கும் அவர்களது குழந்தைக்கும் உதவிய போலீஸ் அதிகாரிகளுக்கு தாம் நன்றிகூற கடமைப்பட்டிருப்பதாக மோட்டார் சைக்கிள் பட்டறை உரிமையாளரான Firadaus தெரிவித்தார். இந்த காணொளியை இதுவரை 1.5 மில்லியனுக்கு அதிகமானோர் பார்த்துள்ளதோடு 99 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் லைக்ஸ் செய்துள்ளனர்.