Latestமலேசியா

கெடாவில் விளம்பர பலகையில் ஜாவி எழுத்து கட்டாய பயன்பாடு

அலோஸ்டார், ஜன 14 – கெடாவில் உள்ள ஒவ்வொரு விளம்பரப் பலகையிலும், அடையாள அறிவிப்பு பலகையிலும் ரூமி எழுத்துக்குப் பிறது இரண்டாவது எழுத்தாக ஜாவி எழுத்தைப் பயன்படுத்துவதைக் கட்டாயமாக்குவதற்கு மாநில அரசு திட்டமிட்டுள்ளது. விளம்பர பலகைகளில் மூன்றாவது மொழியாக மற்ற மொழிகளையும் பயன்படுத்தலாம் என கெடா மாநில ஊராட்சி மற்றும் சுகாதாரக் குழுவுக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் மன்சோர் ஷக்காரியா (Mansor Zakaria ) தெரிவித்திருக்கிறார். எனினும், விளம்பரப் பலகைகளில் பெண்களின் கண்ணைக் கவரும் படங்களைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. தடைசெய்யப்பட்ட பொருட்களின் படங்கள் அல்லது காட்சிகளைப் பயன்படுத்தி விளம்பர பலகைகளை நாங்கள் தடை செய்வோம், அவை எரிச்சலூட்டும், இனவெறி மற்றும் ஆபத்தான ஆயுதங்களைக் காட்டுகின்றன என மன்சோர் கூறினார்.

ஊராட்சி மன்றங்களின் அதிகாரத்திற்கு உட்பட்ட இடங்களில் உள்ள விளம்பரப் பலகைகளில் அனைத்து புதிய ஆலோசனைகளையும் அமல்படுத்துமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். ஜாவி எழுத்தைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் மாநிலத்தின் துணைச் சட்டங்களுக்கு இணங்க, ஜாவி எழுத்தை மாநில அரசு கண்ணியப்படுத்துவதற்கான மாற்று முயற்சிகளில் இதுவும் ஒன்று என்று மன்சோர் கூறினார். ஜாவி எழுத்தைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் ஒரு துணைச் சட்டம் ஏற்கனவே எங்களிடம் உள்ளது. அனைத்து விளம்பரப் பலகைகளும் ஜாவி எழுத்தை இரண்டாவது எழுத்தாகப் பயன்படுத்த ஊக்குவிக்கப்படுகின்றன என்று அவர் கூறினார்

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!