
பாலிங், ஏப்ரல்-3- கெடா, குவாலா கெட்டில், தாமான் டேசா பிடாராவில் 5 பேரைக் கடித்துக் குதறிய 2 Rottweiler நாய்களைக் கருணைக் கொலைச் செய்ய அவற்றின் உரிமையாளர் ஒப்புக் கொண்டுள்ளார்.
நேற்றைய சந்திப்பில் அவ்விணக்கம் காணப்பட்டதாக, பாலிங் மாவட்ட அதிகாரி Yazlan Sunardie Che Yahya கூறினார்.
இதையடுத்து, தூங்க வைத்தல் முறையில் கருணைக் கொலைச் செய்யப்பட ஏதுவாக அவ்விரு நாய்களும் பாலிங் கால்நடை சேவைத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
அதே சமயம், உரிமம் இல்லாமல் அந்நாய்களை வளர்த்து வந்ததற்காக உரிமையாளருக்கு 2 அபராத நோட்டீஸ்களும் வெளியிடப்பட்டதாக Yazlan சொன்னார்.
முன்னதாக கூண்டிலிருந்து தப்பிய அவ்விரு நாய்களும் கண்ணில் கண்ட ஐவர் மீது பாய்ந்து கடித்துக் குதறின.
பாதிக்கப்பட்டவர்கள் சுங்கை பட்டாணி, சுல்தான் அப்துல் ஹலிம் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்