அலோஸ்டார், பிப் 8- மாநில அரசாங்கத்திற்கு வழங்கிய ஆதரவை சில சட்டமன்ற உறுப்பினர்கள் மீட்டுக்கொள்ளக்கூடும் என்பதால் கெடா சட்டமன்றம் கலைக்கப்படலாம் என்று வெளியான ஆருடங்களை சபாநாயகர் டத்தோ Juhari Bulat நிராகரித்தார். இத்தகைய பேச்சுக்கள் ஒரு அரசியல் தந்திரம் என அவர் விவரித்தார். மாநில அரசாங்கம் கவிழ்வதற்கு எந்தவொரு அடிப்படைக் காரணமும் இல்லையயென அவர் விகரித்தார். மாநில சட்டமன்றம் வலுவாக இருக்கிறது.எந்தவொரு மாற்றமும் இல்லையென அவர் தெரிவித்தார். ஜோகூர் சட்டமன்றம் கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து பேரா அரசாங்கம் மற்றும் கெடா அரசாங்கமும் கலைக்கப்பபடலாம் என ஆருடங்கள் வெளியாகின. பெரிக்காத்தான் நேசனல் தலைமையிலான மாநில அரசாங்கங்கள் வலுவாக இருப்பதாக Juhari Bulat தெரிவித்தார்.
Related Articles
Check Also
Close
-
சுங்கை பூலோ சிறையில் கைதிகள் நெரிசல்2 hours ago