Latestமலேசியா

கெடா மந்திரிபுசார் சனுசியை புக்கிட் அமான் விசாரிக்கும்

கோலாலம்பூர். ஜூன் 10 – கெடா மந்திரிபுசார் முகமட் சனுசி சோதனை அடிப்படையில் Pick Up வாகனத்தை ஓட்டிப்பார்த்ததன் மூலம் MCOவின் கீழ் தவறு புரிந்துள்ளார் என்று கூறப்படுவது தொடர்பில் புக்கிட் அமான் விசாரணையை மேற்கொள்ளும்.

அந்த சம்பவம் தொடர்பான விசாரணையை நாங்கள் முடித்து விட்டோம். இது தொடர்பான விசாரணை அறிக்கை போலீஸ் தலைமையகமான புக்கிட் அமானுக்கு நாளை அனுப்பி வைக்கப்படும் என Seberang Perai மத்திய போலீஸ் நிலையத்தின் தலைவர் Shafee Abdul Samad தெரிவித்தார்.

Juru Auto City யிலிருந்து 211,000 ரிங்கிட் விலையுள்ள Pick Up வாகனத்தை கெடா மந்திரிபுசாரும் அவரது இரண்டு உதவியாளர்களும் சோதனை அடிப்படையில் ஓட்டிச் சென்றதை தாம் பார்த்தாக பெண் ஒருவர் கடந்த சனிக்கிழமையன்று தமது முகநூலில் பதிவேற்றம் செய்திருந்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!