Latestமலேசியா

கெடா மந்திரி பெசார் வீட்டிலும் வெள்ளம்; குடும்பத்தோடு வெளியேறிய சனுசி நோர்

அலோர் ஸ்டார், டிசம்பர்-1 – கெடாவில் ஏற்பட்டுள்ள பெரு வெள்ளத்தில் மந்திரி பெசாரின் அதிகாரத்துவ இல்லமான Seri Mentaloon-னும் தப்பவில்லை.

அடைமழையால் அலோர் ஸ்டார், ஜாலான் அனாக் புக்கிட்டில் அமைந்துள்ள அவ்வில்லத்தில் கால் முட்டி வரை வெள்ள நீர் ஏறியது.

இதனால் பாதுகாப்புக் கருதி டத்தோ ஸ்ரீ சனுசி மொஹமட் நோரும் (Datuk Seri Sanusi Md Nor) அவரின் குடும்பமும் அங்கிருந்து வெளியேறினர்.

மந்திரி பெசாரின் ஊடக அதிகாரி டிக் டோக்கில் பதிவேற்றிய 138 வினாடி வீடியோவில், சனுசி முட்டியளவு தண்ணீரில் முதுகில் தன் மகளைச் சுமந்தபடி வருகிறார்.

சனுசியின் துணைவியாரும் மகள்களும் MB இல்லப் பணியாளர்கள் உதவியுடன் உடைமைகள் அடங்கிய பெட்டிகளை எடுத்துகொண்டு வெளியேறினர்.

கெடாவில் இன்று காலை வரைக்குமான நிலவரப்படி, 8,000 பேர் வெள்ள நிவாரண மையங்களில் தங்கியுள்ளனர்.

6 மாவட்டங்களில் அத்தகைய 51 மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!