
கோலாலம்பூர், மே 15 – கெடாவின் தென்பகுதி மற்றும் பினாங்கு தீவின் சில பகுதிகளில் உள்ள மக்கள் நீர் விநியோக தடையினால் இன்று முதல் புதன்கிழமைவரை பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். மூடா ஆற்றில் திடீரென நீர் மட்டம் குறைந்ததால் முக்கிய நீர் சுத்திகரிப்பு மையங்கள் வழக்கமாக சுத்திகரிக்கப்பட்ட நீரை உற்பத்தி செய்ய முடியவில்லை என கூறப்பட்டது. செபெராங் பிறையின் மூன்று மாவட்டங்கள் மற்றும பினாங்கின் தென் பகுதியில் உள்ள பல பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பயனீட்டாளர்கள் நீர் விநியோகத் தடையினால் பாதிக்கப்பட்டுள்ளதாக பினாங்கு நீர் வினியோக கழகத்ன் தலைமை செயல் அதிகாரி K.Pathmanathan தெரிவித்தார். கெடாவில் Kuala Muda, Kulim மற்றும் Baling வட்டாரத்தைச் சேர்ந்த சுமார் 252,000 பயனீட்டாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.