கெடா, செப்டம்பர் 19 – கனத்த மழையைத் தொடர்ந்து, கெடா மற்றும் பெர்லிஸ்சில் ஏற்பட்ட வெள்ளத்தில் கிட்டத்தட்ட 5000 ஹெக்டர் நெல் வயல்கள் வெள்ளத்தில் மூழ்கின.
கெடா மற்றும் பெர்லீஸ் மூடா வேளாண்மை மேம்பாட்டு ஆணையத்தின் எல்லைக்குட்பட்ட அந்த வயல்களில், அறுவடைக்குத் தயாராக இருந்த 26.6 விழுக்காடு நெல் வயல்கள் வெள்ளத்தில் சேதமடைந்தன.
மடா பகுதியிலுள்ள 100,000க்கும் மேற்பட்ட நெல் வயல்களில் 68 சதவிகிதம் அறுவடை நிலையிலிருந்ததாக விவசாயம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், கடந்த செப்டம்பர் 12 முதல் 17 வரை, நெல் வயல் பகுதிகளில் சராசரி மழையளவு 66 மில்லிமீட்டராக பதிவாகியுள்ளது. இது மிகவும் கனமானதாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.