
அலோஸ்டார், பிப் 4 -நாட்டில் வெள்ளத்தினால் புதிதாக கெடா மாநிலமும் பாதிக்கப்பட்டது. நேற்று மாலை மணி மூன்று அளவில் சுமார் இரண்டு மணிநேரம் பெய்த கடுமையான மழையினால் Bandar Bahru வுக்கு அருகே Relau வில் தற்காலிக நிவாரணை மையம் திறக்கப்பட்டது . அங்கு வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மூன்று குடும்பங்களைச் சேர்ந்த 14 பேர் Relau தேசிய பள்ளியில் அமைக்கப்பட்ட நிவாரண மையத்தில் தங்கியிருக்கின்றனர். Mukim Relau வில் பல இடங்களில் திடீர் வெள்ளம் ஏற்பட்டது. இதனிடையே ஜோகூர் மாநிலத்திலும் வெள்ள நிலைமையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அங்கு நேற்றிரவு 8 மணிவரை 846 பேர் மட்டுமே தற்காலிக நிவாரண மையத்தில் தங்கியிருக்கின்றனர் என மாநில பேரிடர் நிர்வாக மையம் தெரிவித்தது.