
கோலாலம்பூர், பிப் 17 – கெத்தும் போதைப் பொருள் நீர் தயாரிப்பில் ஈடுபட்டு வந்த ஐந்து ஆடவர்கள் கைது செய்யப்பட்டனர். 23 முதல் 27 வயதுடைய உள்நாட்டைச் சேர்ந்த அந்த ஆடவர்கள் அனைவரும் பெட்டாலிங் ஜெயா வீடமைப்பு பகுதியிலுள்ள வீடு ஒன்றில் கைது செய்யப்பட்டதாக பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஏ.,சி.பி Mohamad Fakhruddin வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருக்கிறார். அதோடு கெத்தும் நீர் தயாரிப்பதற்காக வசதிகளோடும் அந்த நீரை பாதுகாப்பாக வைத்திருப்பதற்கும் அந்த வீட்டின் சமையல் அறை விரிவுபடுத்தப்பட்டிருந்ததாகவும் அவர் கூறினார். கெத்தும் போதைப் பொருள் நீர் தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் பல்வேறு பொருட்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட 5 சந்தேகப் பேர்வழிகளும் பல்வேறு குற்றப் பின்னணியில் சம்பந்தப்பட்டவர்கள் என்றும் தெரியவந்துள்ளது.