
கோலாலம்பூர், நவ 6 – கெந்திங் மலையில் அக்டோபர் 28-ஆம் தேதி
4.6 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள சூதாட்ட சில்லுகள் திருடப்பட்டது தொடர்பில் 10 பேர் கைது செய்யப்பட்டனர். அந்த திருட்டு சம்பவம் குறித்து மேற்கொள்ளப்பட்ட முன்னோடி விசாரணைக்குப் பின் 10 பேர் கைது செய்யப்பட்டதை பஹாங் போலீஸ் தலைவர் டத்தோ யஹாயா ஒத்மான் உறுதிப்படுத்தினார்.
இதில் சம்பந்தப்பட்ட சந்தேகப் பேர்வழிகளின் அடையாளத்தை கண்டறிவதற்காக விசாரணை இன்னமும் நடைபெற்று வருகிறது. போலீசிற்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் மேலும் அதிகமானோர் கைது செய்யப்படும் தகவலை தாம் மறுக்கவில்லையென அவர் கூறினார்.
அக்டோபர் 28-ஆம் தேதி மாலை மணி 6.30 அளவில் சூதாட்ட சில்லுகள் காணாமல்போனது குறித்து கெந்திங் சூதாட்ட விடுதியின் பாதுகாப்பு அதிகாரிகளிடமிருந்து புகார் பெற்றதை வெள்ளிக்கிழமையன்று பெந்தோங் போலீஸ் உறுதிப்படுத்தியது.