கெந்திங், ஆகஸ்ட் -26 – Jalan Genting Highlands சாலையில் நேற்று நிகழ்ந்த விபத்தில் 68 வயது e-hailing ஓட்டுநர் உயிரிழந்தார்.
15.8-வது கிலோ மீட்டரில் காங்ரீட் (concrete) தடுப்புச் சுவரில் கார் மோதியதில் Hon Hoock Chee தலையில் பலத்த காயமேற்பட்டு சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார்.
காரின் பின்னால் அமர்ந்திருந்த பயணியான 70 வயது மூதாட்டி காயங்கள் எதுவுமின்றி உயிர் தப்பினார்.
மாலை 5.30 மணிக்கு நிகழ்ந்த சம்பவத்தின் போது, அந்த Perodua Myvi கார் கெந்திங் மலையிலிருந்து கிள்ளானை நோக்கி இறங்கி வந்து கொண்டிருந்தது.
அப்போது கார் கட்டுப்பாட்டை இழந்து காங்ரீட் சுவரில் மோதியது போலீஸ் விசாரணையில் கண்டறியப்பட்டது.