கெப்பாளா பத்தாஸ், ஆக 13 – தாய்க்கும் மகனுக்குமிடையே நடைபெற்ற தகராறை தடுத்து நிறுத்த முயன்ற வயதான மாது ஒருவர் கத்தரிக்கோலினால் குத்தப்பட்டு மரணம் அடைந்தார். தலையில் கடுமையாக குத்தப்பட்டதால் 80 வயதுடைய அந்த பெண்மணி செபெராங் ஜெயா மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டபோதிலும் அவர் இறந்ததாக தெரிவிக்கப்பட்டது. இந்த துயரச் சம்பவம் காலை மணி 11 அளவில் பெக்கான் பாராட்டிற்கு (Pekan Darat) அருகே Gelung Bubu-வில் நிகழ்ந்தது. அந்த தகராறில் அவ்வீட்டில் இருந்த தனது உறவினரான அந்த மாது தலையிட்டதால் ஆத்திரம் அடைந்த 40 வயது சந்தேகப் பேர்வழி அங்குள்ள மேஜையில் வைக்கப்பட்டிருந்த கத்தரிக்கோலை எடுத்து அந்த மாதுவின் தலையின் இடது பகுதியில் தாக்கியுள்ளான்.
இந்த சம்பவத்தின்போது அந்த சந்தேகப் பேர்வழியின் தாயாரும் காயத்திற்கு உள்ளானதைத் தொடர்ந்து அவர் கப்பளா பத்தாஸ் (Kepala Batas) மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார். அதன் பின் வெறித்தனமாக செயல்பட்ட அந்த ஆடவன் அவ்வீட்டிலுள்ள கண்ணாடி ஜன்னல்களை உடைத்துவிட்டு தப்பிச் சென்றபோது அவனை போலீசார் கைது செய்தனர்