பெட்டாலிங் ஜெயா, செப்டம்பர் -1, நேற்று முன்தினம் இரவு கெப்போங்கில் ஏற்படத் தொடங்கிய Unifi இணையச் சேவைப் பாதிப்புக்கு, இணையக் கேபிள் திருட்டே காரணமென Telekom Malaysia (TM) தெரிவித்துள்ளது.
இதனால் அப்பகுதியில் 4,000 பயனர்கள் பாதிக்கப்பட்டதாக TM அறிக்கையொன்றில் கூறியது.
சேவைப் பாதிப்பை சரிசெய்ய TM தொழில்நுட்பக் குழு இரவு பகலாக உழைத்து வருகிறது.
அதன் பலனாக, சுமார் 80% பயனர்களுக்கு இணையச் சேவை வழக்கத்திற்குத் திரும்பியது.
எஞ்சியவர்களுக்கு சனிக்கிழமை இரவுக்குள் இணையச் சேவை வழக்கம் போல் கிடைத்திட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக TM கூறியது.
கேபிள் திருட்டு, இணையச் சேவைக்கு அடிக்கடி பாதிப்பை ஏற்படுத்துவதாகக் கூறிய TM, அது குறித்து தகவல் தெரிந்தால் பொது மக்களும் அதிகாரிகளிடம் புகார் தெரிவிக்க வேண்டுமெனக் கேட்டுக் கொண்டது.