Latestமலேசியா

கெமாசில் கட்டுமானத் தளம் ஒன்றில் பழங்காலத்து குண்டு கண்டெடுப்பு; வெடிக்க வைத்து செயலிழப்பு

தம்பின், ஆகஸ்ட்-26 – நெகிரி செம்பிலான், கெமாசில் உள்ள கட்டுமானத் தளமொன்றில் பழங்காலத்து குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.

சம்பவ இடம், Jalan Pasir Besar – Jelai-யில் நிறுவனமொன்று ஓராண்டாக மேற்கொண்டு வரும் கட்டுமானத் திட்டப் பகுதியாகும்.

கட்டுமானத் தளத்தை சமப்படுத்துவதற்காக மண்ணைத் தோண்டிய போது, Unexploded Ordnance (UXO) ரக வெடிப்பொருளை தோட்டப் பணியாளர் ஒருவர் கண்டெடுத்து தகவல் கொடுத்தார்.

இதையடுத்து வெடிகுண்டு செயலிழப்பு குழு சம்பவ இடம் வரவழைக்கப்பட்டு, யாருக்கும் காயமேற்படாத வகையில் குண்டு அழிக்கப்பட்டதாக தம்பின் போலீஸ் கூறியது.

வெடிப்பொருள் எஞ்சியிருக்காமல் இருப்பதை உறுதிச் செய்யும் பொருட்டு, குண்டு அழிக்கப்பட்ட இடம் முழுவதுமாக சுத்தம் செய்யப்பட்டது.

அழிக்கப்பட்ட குண்டு, ஆகாயத்திலிருந்து பாய்ச்சப்படும் வகையைச் சேர்ந்த பழங்காலத்து குண்டு என விசாரணையில் கண்டறியப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!