தம்பின், ஏப்ரல் 5 – 14 வயது தங்கையை கற்பழித்தது தொடர்பில், பதின்ம வயது ஆடவன் ஒருவனுக்கு எதிராக, இன்று தம்பின் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்டது.
17 வயதான அந்த பதின்ம வயது இளைஞன் தமக்கு எதிரான அந்த குற்றச்சாட்டை ஒப்புக் கொண்டான்.
கடந்த பிப்ரவரி மாதம் ஆறாம் தேதி, மாலை மணி நான்கு வாக்கில், கெமாசிலுள்ள வீடொன்றில் அவன் அக்குற்றத்தை புரிந்ததாக தெரிவிக்கப்பட்டது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், 30 ஆண்டுகளுக்கு மேற்போகாத சிறைத் தண்டனையுடன், குறைந்தது பத்து பிரம்படிகளும் விதிக்கப்படலாம்.
ஆயிரம் ரிங்கிட் உத்தரவாதத் தொகை மற்றும் தாய் அல்லது தந்தையின் உத்தரவாததின் பேரில் அந்த இளைஞனை இன்று விடுவிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
இவ்வழக்கு விசாரணை மே 27-ஆம் தேதி செவிமடுக்கப்படும்.