Latestமலேசியா

கெமாமானில், 15 வயது யுவதி மாறி மாறி கற்பழித்த குற்றச்சாட்டு ; ஏழு பதின்ம வயது ஆடவர்கள் கைது

கெமாமான், நவம்பர் 10 – திரங்கானு, கெமாமானில், 15 வயது யுவதி ஒருவரை மாறி மாறி கற்பழித்ததாக நம்பப்படும், ஏழு பதின்ம வயது ஆடவர்கள் விசாரணைக்காக, அடுத்த செவ்வாய்கிழமை வரை ஆறு நாட்களுக்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

19 வயதுக்கும் 14 வயதுக்கும் இடைப்பட்ட அவர்கள் அனைவரும் நேற்று மாலை வெவ்வேறு இடங்களில் கைதுச் செய்யப்பட்டனர்.

அண்மையில், சம்பந்தப்பட்ட யுவதி செய்த போலீஸ் புகாரை அடுத்து அவர்கள் கைதுச் செய்யப்பட்டதாக, கெமாமான் மாவட்ட போலீஸ் தலைவர் சுப்ரிடெண்டன் அன்யான் ரம்லான் தெரிவித்தார்.

கடந்த ஜூலையில், கிஜாலிலுள்ள, வீடொன்றில் அவர்கள் அக்குற்றத்தை புரிந்ததாக, சம்பந்தப்பட்ட யுவதி தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

தனக்கு அறிமுகம் ஆன ஆடவன் ஒருவனால் அவ்வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்ட அந்த யுவதி, பின்னர் அங்கிருந்த இதர எழுவரால் மாறி மாறி கற்பழிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதுவரை அவர்களில் எழுவர் கைதுச் செய்யப்பட்டுள்ள வேளை; மற்றொருவன் தேடப்பட்டு வருகிறான்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!