
கெமாமான், நவ 18 – எதிர்வரும் டிசம்பர் 2 ஆம் திகதி நடைப்பெறவுள்ள கெமாமான் இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று நடைப்பெற்றது. அதில் பாஸ் மற்றும் தேசிய முன்னணி இடையே நேரடி போட்டி நிலவியுள்ளது.
பாஸ் மந்திரி பெசார் அகமட் சம்சூரி மொக்தார் மற்றும் முன்னாள் இராணுவ வீரரான தேசிய முன்னணியின் ராஜா முகமட் அபாண்டி ஆகியோர் இன்று காலை வேட்புமனு தாக்கல் செய்தனர்.
15வது பொதுத்தேர்தலின் பாஸ் கட்சியின் வேட்பாளர் சே அலியாஸ் ஹமீட்டின் வெற்றியை தேர்தல் நீதிமன்றம் ரத்து செய்ததைத் தொடர்ந்து அங்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.