Latestமலேசியா

கெரிக்கில் யானை மிதித்து 65 வயது ஆடவர் மரணம்

கிரிக், ஜூன் 24 – கெரிக்கில்  Kampung Lerlar   ரப்பர் தோட்டத்தில்   65 வயது ஆடவர் ஒருவரை  யானை மிதித்ததால் மரணம் அடைந்தார்.  நேற்று மாலை மணி  3.15 அளவில்  இரத்த வெள்ளத்தில்    தரையில்  அவர்  இறந்துக்  கிடந்ததாக  கெரிக் (Gerik) மாவட்ட போலீஸ் தலைவர்   சூப்பிரிடென்டன்  சுல்கிப்ளி  மாமுட்  (Zulkifli  Mahmood  )தெரிவித்தார்.  

அந்த நபர் விறகு தேடி  ரப்பர் தோட்டத்திற்கு சென்றபோது யானையின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார். 

அவரது அலறலைக் கேட்டு  அவரது  44 வயது மகள்   சம்பவம் நடந்த இடத்திற்கு சென்று பார்த்தபோது தரையில்  ரத்த வெள்ளத்தில் அவர் இறந்து கிடந்ததை  கண்டு பெரும் அதிர்ச்சிக்கும் வேதனைக்கும் உள்ளானார்.    

இதனிடையே  யானை நடமாட்டத்தை தொடர்ந்து   Kampung  Lerlar   பகுதியில்  விவசாய நடவடிக்கையில் ஈடுபடுவோர் மிகவும் கவனமாகவும் விழிப்பாகவும் இருக்கும்படி  சுல்கிப்ளி கேட்டுக் கொண்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!