Latestஇந்தியா

கெளதம் கார்த்திக், மஞ்ஜிமா மோகன் நவம்பர் 28-ஆம் தேதி திருமண பந்தத்தில் இணைகின்றனர்

கெளதம் கார்த்திக், மஞ்ஜிமா மோகன் நவம்பர் 28-ஆம் தேதி திருமண பந்தத்தில் இணைகின்றனர்

நடிகர் கெளதம் கார்த்திகும், நடிகை மஞ்ஜிமா மோகனும் இம்மாதம் 28-ஆம் தேதி திருமண பந்தத்தில் இணையவுள்ளனர். இம்மாத தொடக்கத்தில், அவ்விருவரும் தங்கள் உறவு குறித்து அறிவித்த வேளை ; தற்போது தங்கள் திருமணம் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

நெருங்கிய நண்பர்கள், குடும்பத்தார் புடைசூழ அவர்களின் திருமணம் நடைபெறுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மஞ்ஜிமாவை திருமணம் செய்துக் கொள்ள விருப்புவதாக தாம் தான் முதலில் கேட்டதாக, செய்தியாளர் சந்திப்பின் போது கெளதம் கார்த்திக் சொன்னார்.

அதற்கு பதில் சொல்ல மஜிசிமா இரு நாட்கள் கால அவகாசம் எடுத்துக் கொண்டதை சுட்டிக் காட்டிய கெளதம் கார்த்திக், அந்த இரண்டு நாள் காத்திருப்பு பெரும் அவஸ்தையாக இருந்ததாக குறிப்பிட்டார்.

2019-ஆம் ஆண்டு, தேவராட்டம் திரைப்படத்தில் இணைந்து பணியாற்றிய போது, கெளதம் கார்த்திக்கும், மஞ்ஜிமா மோகனும் நல்ல நண்பர்களாகினர். படம் முடிவடைந்த பின்னரே அவர்களுக்கு இடையில் காதல் மலர்ந்தது.

பிரபல தமிழ் திரைபட நட்சத்திரம் நடிகர் கார்த்திக்கின் மகனான கெளதம் கார்த்திக், பிரபல இயக்குனர் மனிரத்னத்தின் கடல் திரைபடம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். அதே போல, கெளதம் வாசுதேவ் மேனன் மூலமாக, அஞ்சம் என்பது மடமையடா திரைப்படம் வாயிலாக மஞ்ஜிமா மோகன் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!