
கேமரன் மலை, செப் 28 – கேமரன் மலையில் Gunung Jasar மலையேறச் சென்ற இந்திய மலையேறி Nanda Suresh Nadkarni i கடந்த ஒரு வார காலமாக காணவில்லை , அவர் செப்டம்பர் 22 ஆம் தேதி காலை 9 மணியளவில்
தானா ராத்தா ஹோட்டலில் இருந்து Gunung Jasar மலையேறச் சென்றதாக நம்பப்படுகிறது என கேமரன் மலை மாவட்ட போலீஸ் துணை சூப்பிரடண்ட்
Azri Ramli தெரிவித்தார். Nanda Suresh செப்டம்பர் 19 ஆம்தேதி தானா ராத்தா ஹோட்டலில் பதிவு செய்துள்ளார். செப்டம்பர் 24ஆம் தேதி அவர் அந்த ஹோட்டலின் தங்கும் அறையை காலி செய்திருக்க வேண்டும். அவர் காணாமல்போன விவகாரத்தை சம்பந்தப்பட்ட ஹோட்டலின் உரிமையாளர் திங்கட்கிழமையன்று போலீசில் புகார் செய்துள்ளார்.
செப்டம்பர் 25ஆம் தேதியிலிருந்து Nanda Suresh சை தேடும் மற்றும் மீட்பு நடவடிக்கை தொடங்கப்பட்டதாக Azri தெரிவித்தார். தேடும் நடவடிக்கையில் தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர், பொது தற்காப்புப் படை மற்றும் அரசு சார்பற்ற இயங்கங்களை சேர்ந்தவர்கள் என சுமார் 100 பேர் இடம் பெற்றுள்ளனர். மூன்று மோப்ப நாய்களின் உதவியோடு தேடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இந்த விவகாரம் தொடர்பில் பொதுமக்கள் தேவையற்ற ஆருடங்கள் கூறுவதை தவிர்க்கும்படி பகாங் தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவின் பொது உறவு அதிகாரி Zulfadi Zakaria கேட்டுக்கொண்டார்.