
பஹாங், கேமரன் மலையிலுள்ள, தங்கும் விடுதி ஒன்றில் தங்கியிருந்த போது, தாங்கள் எதிர்கொண்ட அமானுஷ்ய தொந்தரவுகள் குறித்து, இணையதளவாசிகள் சிலர் பகிர்ந்து வருகின்றனர்.
டிக் டாக் பயனரான @aifaazlan என்பவர் அண்மையில் தமக்கு நேர்ந்த அமானுஷ்ய அனுபவம் தொடர்பில் காணொளி ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அந்த காணொளியில், கையில் காயத்துடன் குழந்தை ஒன்று காணப்படும் வேளை ; தங்கும் விடுதியில் தங்கியிருந்த போது குழந்தைக்கு காயம் ஏற்பட்டது வியப்பாக உள்ளது என அவர் பதிவிட்டுள்ளார்.
அதோடு, அதிகாலை மணி மூன்றுக்கு, காலடி சத்தம் கேட்டதாகவும், அதற்கு அஞ்சி இரவு முழுவதும் தனது பணிப்பெண் தூங்கவே இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமக்கு நேர்ந்த அந்த விநோதமான அனுபவத்தை, வேறு யாரும் எதிர்கொண்டுள்ளீர்களா? எனவும் அவர் தமது பதிவில் வினவியுள்ளார்.
அதற்கு, @mamywaa91 எனும் பயனர், அதே தங்கும் விடுதியில் தமக்கும் ஒரு பயங்கர அனுபவம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
அங்கு தங்கி இருந்த போது, பின்னிரவு மணி இரண்டு வாக்கில், காலடி சத்தத்தை கேட்டதாகவும், அதனால் விடியம் வரை தாம் உறங்கவில்லை எனவும் அவர் பதிவிட்டுள்ளார்.
அந்த காணொளியை இதுவரை சுமார் 15 ஆயிரம் பேர் பார்த்துள்ள வேளை ; பலர் தங்களுக்கு நேர்ந்த விநோதமான அனுபவங்களை பதிவிட்டு வருகின்றனர்