Latestமலேசியா

கேமரன் மலை போலீஸ் IPD- யில் புதிய Surau கட்டப்படுகிறது

கோலாலம்பூர்,  மார்ச் 13 – பிரபல  வீடமைப்பு மேம்பாட்டு நிறுவனமான   LBS  Bina Group   நிறுவனம், பகாங் ,கேமரன் மலை மாவட்ட போலீஸ்  தலைமையகத்தில்   புதிய Surau -தொழுகை  இடத்துக்கான  கால்கோல் விழாவினை நடத்தியது.

அந்த விழாவில், நாட்டின்  பேரரசர் அல் சுல்தான் அப்துல்லா, பேரரசியார் துங்கு  ஹஜா அசிசா அமினா மைமுனா இஸ்கண்டரியா  ஆகியோர் கலந்து கொண்டனர்.

அந்த நிகழ்ச்சியில்,  பகாங் மெந்திரி பெசார் Datuk Seri Wan Rosdy Wan Ismail,  தேசிய போலீஸ்  படையின்  துணைத் தலைவர் Tan Sri Razarudin Husain,  பகாங் போலீஸ் தலைவர்  Dato’ Sri Ramli bin Mohamed Yoosuf, LBS  நிர்வாக இயக்குநர் Dato’ Seri Daniel Lim ஆகியோரும்  கலந்து கொண்டனர்.

இப்பகுதியில், 6,016 சதுர பரப்பளவில் மேற்கொள்ளப்படவிருக்கும்  புதிய தொழுகை இட திட்டத்துக்கு 50 லட்சம் ரிங்கிட் செலவாகுமென கணக்கிடப்பட்டுள்ளது.

1  ஏக்கர் பரப்பளவில் கட்டப்படும் இந்த   Surau ,  200 பேரை  உள்ளடக்கக் கூடும்.  மேலும் இந்த தொழுகை இடம்  இமாமிற்கான அறை, ஆண் – பெண் கழிவறை,  சந்திப்பு அறை, பிரேத அறை, சமையல் அறை,  உணவருந்தும் வசதி ஆகியவற்றைக் கொண்டிருக்கும் .

அதோடு,  62 கார்கள் , 15 மோட்டார் சைக்கிள்கள் நிறுத்துவதற்கான இடமும் ஏற்படுத்தப்படும்.

இந்த Surau கேமரன் மலை மாவட்ட தலைமையக ஊழியர்களும், உள்ளூர் மக்களும்  தொழுகையை மேற்கொள்வதற்கான இடமாகவும்,  மக்களை ஒன்றுபடுத்தக் கூடிய  பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் இடமாகவும் திகழவிருப்பதாக, LBS Bina Group நிர்வாக இயக்குநர் Tan Sri Lim Hock San தெரிவித்தார்.

Cameron Centrum – மில் மேற்கொள்ளப்படும் வர்த்தக மேம்பாட்டு திட்டத்தின் மேம்பாட்டாளர் என்ற முறையில், நிறுவனத்தின் வர்த்தக சமூக கடப்பாட்டின் ஒரு பகுதியாக, இந்த  Surau  கட்டப்படுவதாக அவர் கூறினார்.

கேமரன் மலையில்  LBS  நிறுவனம் மேற்கொள்ளும் முதலீட்டு  திட்டம், உள்ளூர் மக்களின் நல்வாழ்விற்கு  வித்திடுமெனவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

 

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!