Latestஉலகம்

கேரளாவில் கோயிலில் சமய சடங்குகளை செய்யும் ரோபோ யானை

கேரளா, மார்ச் 1 – இந்தியா, கேரளாவில் , ஆலயமொன்று விழாக்காலங்களின் போது சடங்குகளை செய்வதற்காக, ரோபோ யானையை அறிமுகப்படுத்தியுள்ளது .

கோயில்களில் வளர்க்கப்படும் யானைகள் பூஜைகளின் போது மதம் பிடித்து பாகன் மற்றும் பக்தர்களை தாக்குவதுண்டு.

அதோடு, பிராணிகள் நன்முறையில் நடத்தப்படுவதை உறுதி செய்வதற்காக, PETA அமைப்பு மற்றும் நடிகை பார்வதி திருவோடு ஆதரவுடன் , இந்த ரோபோ யானை கோயிலுக்கு பரிசாக வழங்கப்பட்டிருக்கிறது.

பார்ப்பதற்கு நிஜ யானையைப் போன்றே காட்சியளிக்கும் 3. 3 மீட்டர் உயரமும் 800 கிலோ எடையும் கொண்ட இந்த யானை தற்போது திருச்சூரில் உள்ள ஸ்ரீகிருஷ்ணர் ஆலயத்தில் தனது சேவையை மேற்கொண்டு வருகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!