மலாக்கா, டிசம்பர்-28, மலாக்கா பத்து பெரண்டாமில் ஓர் உணவகம் மற்றும் பதிவுப் பெறாத கேளிக்கை மையத்தை மாநில குடிநுழைவுத் துறை சோதனையிட்டதில் 13 பணிப்பெண்கள் உட்பட 15 வெளிநாட்டினர் கைதாகினர்.
பொதுமக்கள் கொடுத்த புகாரின் பேரில் வியாழக்கிழமை இரவு 10 மணிக்கு சோதனை நடத்தப்பட்டதாக, அதன் இயக்குநர் Anirwan Fauzee Mohd Aini கூறினார்.
இரு மாதங்களாக கள்ளக்குடியேறிகளை வேலைக்கமர்த்தி செயல்பட்டு வந்த அம்மையத்தை, குடிநுழைவுத் துறையும் அண்மையக் காலமாக வேவு பார்த்து வந்ததாக அவர் சொன்னார்.
அதிகாரிகளின் கண்களில் படாமலிருக்க, உணவகமும் கேளிக்கை மையமும் இரவு நேரங்களில் செயல்பட்டு வந்துள்ளன.
கைதான 20 முதல் 45 வயதிலான 13 பெண்களும் பேரும் தாய்லாந்து, லாவோஸ், மியன்மார் நாடுகளைச் சேர்ந்தவர்கள்;
எஞ்சிய இரு ஆண்கள் சமையல்காரர்கள் ஆவர்.
முறையான பயணப் பத்திரம் இல்லாதது, அனுமதிக்கப்பட்டதை விட அதிக காலம் தங்கியிருந்தது, பெர்மிட் விதிமுறைகளை மீறியது உள்ளிட்ட குற்றங்களுக்காக அவர்கள் கைதாகியுள்ளனர்.