
கோலாலம்பூர், மார்ச் 27- இன்று நாடாளுமன்றத்தில் அமைச்சரின் கேள்வி நேரத்தின்போது தயாரான பதிலுடன் வரத்தவறிய கல்வித்துறை துணையமைச்சர் Lim Hui Ying கண்டிக்கப்பட்டார். இது நல்லதல்ல. இதுபோன்ற நிலை ஏற்படக்கூடாது என நாடாளுமன்ற துணை சபாநாயகர் Ramli Nor துணையமைச்சர் லிம்மிற்கு நினைவுறுத்தினார். இதனை அரசாங்கம் கவனத்தில் எடுத்துக்கொள்ளும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். பெரிக்காத்தான் நேசனல் Pengkalan Chepa நாடாளுமன்ற உறுப்பினர் Ahmad Marzuk Shaary எழுப்பிய கேள்விக்கு பதில் அளிப்பதற்கு தாம் இன்னும் தயாராகவில்லையென Lim Hui Ying தெரிவித்தபோது எதிர்க்கட்சி உறுப்பினகள் தங்களது ஆட்சேபத்தை தெரிவித்தனர். பள்ளியில் மதிய வேளையின்போது மாணவர்களுக்கு சத்தான உணவு கிடைப்பதை உறுதிப்படுத்துவதற்கு கல்வி அமைச்சின் திட்டம் குறித்து இதற்கு முன் Ahmad Marzuk வினவியிருந்தார். இதற்கு வருத்தம் தெரிவித்த Lim Hui Ying இதுபோன்ற தவறு மீண்டும் ஏற்படாமல் இருப்பதை பார்த்துகொள்வதாக உறுதியளித்தார்.