Latestமலேசியா

கே.எல்.ஐ.ஏ எக்ஸ்பிரஸ், கே.எல் ஐ.ஏ டிரான்சிட் வழக்கம்போல் மீண்டும் சேவையில் ஈடுபட்டது

இதற்கு முன் தடைப்பட்ட கே.எல்.ஐ.ஏ ரயில்
எக்ஸ்பிரஸ் (KLIA Ekspres) மற்றும் கே.எல்.ஐ.டிரன்சிட் (KLIA Transit வழக்கம்போல் மாலை 4 மணியளவில் மீண்டும் சேவையை தொடங்கியது.

கே.எல்.ஐ.ஏ எக்ஸ்பிரஸ் மற்றும் கே.எல்.ஐ.ஏ டிரான்சிட் மீண்டும் சேவையில் ஈடுபட்ட ஆகக்கடைசி விவரங்களை Express Rail Link Sdn Bhd இன்று சமூக ஊடகங்களுக்கு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கேபல் திருட்டு மற்றும் சிக்னல் அமைப்பு சீர்குலைவு சம்பவத்தைத் தொடர்ந்து, KLIA எக்ஸ்பிரஸ் மற்றும் KLIA Transit மற்றும் ERL சேவைகளைப் பாதித்தது.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் எங்கள் பயனர்களுக்கு வசதி செய்யவும், பாதுகாப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து மேம்படுத்தவும் ERL உடனடி நடவடிக்கைகளை செயல்படுத்தியுள்ளது என்று அந்த அறிக்கையில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.

சலாக் திங்கி, புத்ராஜெயா மற்றும் சைபர்ஜெயா நிலையங்களுக்கு இடையில் எதிர்காலத்தில் பயனர்களுக்கு உதவ, இலவச ஷெட்டல் பஸ் சேவையை தொடங்கியுள்ளதாக ERL மேலும் கூறியது. கூடுதலாக பாதுகாப்பு அதிகாரிகள் அப்பகுதியில் நிறுத்தப்பட்டு , ரோந்துப் பணிகள் அதிகரிக்கப்பட்டு, முக்கியமான உள்கட்டமைப்புகளைச் சுற்றி கடுமையான கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சம்பவத்தை விசாரிக்கவும் தடுப்பு நடவடிக்கைகளை செயல்படுத்தவும் தொடர்புடைய அதிகாரிகளுடன் ERL நெருக்கமாக இணைந்து செயல்படுகிறது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!