
கோலாலம்பூர், ஜன 7 – KLIA அனைத்துலக விமான நிலையத்தில் வரையறுக்கப்பட்ட ஏரோடிரெய்ன் மட்டுமே செயல்பட்டு வருவதால் எளிதான பயணத்திற்காக விமான நிலைய நுழைவு பகுதியில் ஷெட்டல் பஸ் சேவைகளை அதிகரிப்பது மற்றும் கூடுதல் அதிகாரிகளை நிறுத்தி வைக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. தற்போது ஒரேயொரு ஏரோடிரெய்ன் மட்டுமே செயல்பட்டு வருவதாகவும் இரண்டாவது ஏரோடிரெய்ன் தொழிற்நுட்ப பிரச்சனைகளை எதிர்நோக்கியிருப்பதாக போக்குவரத்து அமைச்சர் Anthony Loke தெரிவித்திருக்கிறார். விமான நிலையத்திற்கான Aerotrain செயல்பாட்டில் பிரச்சனை இருப்பதால் இந்த விவகாரத்தை சமாளிப்பதற்கான அனைத்து தரப்பினரும் துணிச்சலாக நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.