கோலாலம்பூர், ஏப் 15- கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் முதலாவது மற்றும் இரண்டாவது முனையத்தில் போலீஸின் விரைவான நடவடிக்கைகாக மின்னியல் ஸ்கூட்டரை போலீஸ் பயன்படுத்தவிருக்கிறது. நேற்று கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் முதலாவது முனையத்தின் பயணிகள் வந்தடையும் பகுதியில் ஆடவர் ஒருவர் சுடப்பட்டு தொடர்ந்து சுயநிநினைவற்ற நிலையில் இருக்கும் சம்பவத்தை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ Hussein Omar Khan தெரிவித்தார்.
அதிர்ச்சியை ஏற்படுத்திய இதுபோன்ற சம்பவம் KLIA விமான நிலையத்தில் முதல்முறையாக நடைபெறவில்லை. KLIA விமான நிலையத்தில் பாதுகாப்பு நடவடிக்கை கடுமையாக்கப்பட வேண்டிய அவசியத்தை இத்ந சம்பவம் உணர்த்தியுள்ளது. ஸ்கூட்டர்களை வாங்குவதற்கு சிலாங்கூர் அரசாங்கம் இணக்கம் தெரிவித்திருக்கிறது. முதல் முறையாக மலேசியாவில் ஸ்கூட்டர்களை கொண்ட போலீஸ் குழு கே.எல்.ஏ விமான நிலையத்தில் நிறுத்தப்படுவார்கள் என Hussein கூறினார்.