
பாலேக் பூலாவ், மார்ச் 16 – Bayan Lepas-ற்கு அருகே persiaran Bayan Indah வில் ஒரு உணவகத்திற்கு முன் உணவு வினியோகிப்பாளர் ஒருவரும் மேலும் சில வாடிக்கையாளர்களுக்குமிடையே நிகழ்ந்த கைகலப்பு தொடர்பில் விசாரணை மேற்கொண்ட போலீசார் இரண்டு மூத்த குடிமக்கள் உட்பட மூன்று ஆடவர்களை கைது செய்தனர். அந்த கைகலப்பு தொடர்பான காணொளி நேற்று முதல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது . நேற்று பிற்பகல் 2 மணியளவில் அந்த சம்பவம் நிகழ்ந்ததாக பினாங்கு தென்மேற்கு மாவட்ட துணை Superintendent Jafri Md Zain தெரிவித்துள்ளார்.
அந்த கைகலப்பு நடைபெற்ற 30 நிமிடங்களுக்குப் பிறகு 65 வயதுடைய ஆடவர் ஒருவரிடமிருந்து போலீசார் புகார் பெற்றிருப்பதாகவும் அவர் கூறினார். அந்த தகராறினால் தலை மற்றும் உடலில் தமக்கு காயங்கள் ஏற்பட்டதாகவும் அந்த ஆடவர் புகாரில் தெரிவித்துள்ளார். இதனிடையே இந்த கைகலப்பு தொடர்பில் நேற்றிரவு 9 மணியளவில் உணவு விநியோகிப்பாளரிடமிருந்தும் புகார் பெறப்பட்டதாக Jafri கூறினார்.