Latestமலேசியா

கைகலப்பில் ஈடுபட்ட6 இந்திய ஆடவர்கள் தேடப்படுகின்றனர்

மலாக்கா, அக் 24 – Alor Gajah, Taman Sebang Mutiara Gadek கில் செப்டம்பர் 5 ஆம் தேதி நிகழ்ந்த கைகலப்பு தொடர்பில் 24 முதல் 36 வயதுக்குட்பட்ட அறுவரை விசாரணைக்கு உதவுவதற்காக போலீசார் தேடுகின்றனர். S. Srishashindran , S.Thavaneswaran , C. SIvalingkam , N. Kalithasan , V. Prem Kumar , S. Sanjit Kumar ஆகியோர் தேடப்படுவதாக மலாக்கா போலீஸ் தலைவர் ACP Azlan Abu தெரிவித்தார்.

கடந்த மாதம் ஓப்ஸ் Cantas நடவடிக்கையில் எண்மர் கைது செய்யப்பட்டதோடு அவர்களில் ஒருவர் கொலை செய்ய முயன்ற குற்றத்திற்காக நீதிமன்றத்தில் குற்றச்சாட்டப்பட்டார் என அவர் கூறினார். கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி 34 வயதுடைய ஆடவரை கூர்மையான ஆயுதம் வைத்திருந்த கும்பல் தாக்கியது. அந்த தாக்குதலில் அந்த ஆடவர் கை மற்றும் கால்களில் கடுமையாக காயம் அடைந்தார் என ACP Azlan Abu வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!