Latestமலேசியா

கைதான பேராக் சட்டமன்ற உறுப்பினர் விளக்கம் தர வேண்டும் ; மாநில DAP

கோலாலம்பூர், ஜன 15 – போலீசாரால் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டதன் தொடர்பில், எழுத்துப் பூர்வமாக அறிக்கையை வழங்கும்படி, பேராக் சட்டமன்ற உறுப்பினர் Terence Naidu கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்.

கட்சியின் தலைமைத்துவதற்கு உண்மை நிலவரம் தெரிய அவர் அவ்வாறு செய்ய கேட்டுக் கொள்ளப்பட்டிருப்பதாக பேராக் DAP கட்சி தலைவர் Nga Kor Ming தெரிவித்தார்.
மக்கள் பிரதிநிதிகளின் உயர்நெறி விவகாரத்தில் கட்சி கடுமையானப் போக்கினைக் கொண்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

Terence Naidu, 2018 பொதுத் தேர்தலில் தெலுக் இந்தான் அருகிலுள்ள Pasir Bedamar சட்டமன்ற தொகுதியில் 14, 520 பெரும்பான்மை வாக்குகளில் வெற்றி பெற்று, இரண்டாம் தவணையாக அத்தொகுதியை தக்க வைத்துக் கொண்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!