
கொள்ளம், மே 11 – கேரளா கொத்தரக்கரா அரசு மருத்துவமனையில் கைதி ஒருவருக்கு சிகிச்சை அளித்துக் கொண்டிருந்த மருத்துவக் கல்லூரி மாணவி மருத்துவ வந்தனா அந்த கைதியால் கத்தரிக்கோல் கொண்டு கொடுரமாக குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் கேரளா மாநிலத்தை உலுக்கியுள்ளது.
நேற்று புதன்கிழமை இந்திய நேரம் 4.30 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் கழுத்திலும் நெஞ்சுப் பகுதியிலும் கடும் காயத்திற்கு உள்ளான
23 வயதான மருத்துவர் வந்தனா பின்னர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
இக்கொலையைச் செய்த தனியார் பள்ளியின் ஆசிரியரான 42 வயது கைதி சண்டிப் போலிஸ்காரர் ஒருவர் உட்பட மேலும் நால்வரையும் இச்சம்பவத்தின் போது தாக்கியுள்ளார்.
கேரளாவில் மாநில அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் இச்சம்பவத்தைத் எதிர்த்து இந்திய மருத்துவ அமைப்பான IMA நேற்று தொடங்கி இன்று இந்திய நேரம் காலை 8 மணிவரை வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நாடு தளுவிய அளவில் இச்சம்பவம் மிகப்பெரிய கண்டனத்தை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், மருத்துவ அதிகாரிகளின் பாதுகாப்பு நிலை குறித்து பல கேள்விகள் எழுந்துள்ளன.
இந்நிலையில் இச்சம்பவத்தை கேட்டறிந்த மாநில முதல்வத் பிரணாயி விஜயன் மருத்துவர் வந்தனாவில் உடல் வைக்கப்பட்டிருக்கும் மருத்துவமனைக்கு சென்று நிலைமையை நேரில் கண்டுள்ளார்.