Latestஇந்தியாஉலகம்

மைனஸ் 25℃ குளிரில் திருமணம் செய்து கொண்ட காதலர்கள்!

இந்தியா, பிப் 29 – மைனஸ் 25 டிகிரி செல்சியஸ் குளிரில் காதலர்கள் திருமணம் செய்து கொண்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்திய மாநிலமான குஜராத்தைச் சேர்ந்த அந்த காதலர்கள், ஹிமாச்சல பிரதேசத்தின் கடும் குளிரான பள்ளத்தாக்கில் திருமணம் செய்து கொண்டனர்.

மைனஸ் 25 டிகிரி செல்சியஸ் கடும் குளிரில் அலங்கார மணமேடை அமைத்து இந்து முறைப்படி இவர்கள் திருமணம் செய்துகொண்டுள்ளனர்.

அந்த வீடியோ ஹிமாச்சல பிரதேசத்தின் உதவி மக்கள் தொடர்பு அலுவலர் அஜய் பன்யால் என்பவர் சமூக வலைதளத்தில் பகிர்த்துள்ளார்.

மேலும் அவரின் பதிவில், ‘இந்த மாதிரியான திருமணங்கள் நடப்பது இதுவே முதல்முறை. நெடுந்தூரம் பயணம் செய்து தனித்துவமாக திருமணம் செய்பவர்களுக்கு ஏற்ற இடமாக ஸபிதி மாறிவருகிறது’ என்று கூறியுள்ளார்.

காணொளியின் தொடக்கத்தில் புகைப்பட எடுப்பவர் அந்த கடும் குளிரில் மணப்பெண்ணை படம் பிடிப்பதும், பின்னர் மணமக்களின் திருமண சடங்குகளும் இடம்பெற்றிருந்தது.

‘நீண்ட நெடுந்தூர பயணத் திருமண பயணத்திற்கான விருதையும் இந்த திருமணத்தின் வழி வெற்றுள்ளதை மற்றொரு காணொளியிலும் பதிவிட்டுள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!