
இந்தோனேசியா, ஜகார்த்தாவில், ஆற்றில் தவறி விழுந்த இரு பெண் மாணவர்கள், முதலில் தங்கள் கைப்பேசியை ‘காப்பாற்ற’ முயலும் காணொளி ட்விட்டரில் வைரலாகியுள்ளது.
ராக்கிட்டில் பயணிக்கும் அவ்விரு மாணவர்களில் ஒருவர் நிலைதடுமாறியதால், இருவரும் தவறி ஆற்றில் விழுந்தனர்.
அதில் ஒருவர் முழுமையாக நனைந்து விட்ட போதிலும், கைப்பேசியை உயர தூக்கி பிடித்து அதனை நீர் படாமல் காக்கும் காணொளி இணையத்தளவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
உடல் நனைந்தால் துடைத்துக் கொள்ளலாம், கைப்பேசி நனைந்தால் பணத்தை செலவிட வேண்டுமென, அதில் ஒருவர் கேளியாக கருத்தை பதிவிட்டுள்ளார்.