Latestஇந்தியாஉலகம்

கைரிக்கு அனைத்துலக அங்கீகாரம்; இந்தியாவில் நிறுவனமொன்றின் வாரிய உறுப்பினராக நியமனம்

புது டெல்லி, மே-10, சுகாதாரத் துறை முன்னாள் அமைச்சர் Khairy Jamaluddin இந்தியாவைத் தலைமையகமாகக் கொண்ட
Fischer Medical Ventures Ltd நிறுவனத்தின் வாரிய உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவ்வாண்டு மே 4 முதல் ஐந்தாண்டுகளுக்கு சுயேட்சை இயக்குனர் என்ற அந்தஸ்தில் Khairy கூடுதல் இயக்குனராக நியமனம் பெற்றிருப்பதை, இதற்கு முன் Fischer Chemic Ltd என்றழைக்கப்பட்ட அந்நிறுவனம் உறுதிப்படுத்தியது.

Fischer Medical Ventures, இரசாயணப் பொருட்கள் மற்றும் ஆய்வுக்கூட இயந்திரங்கள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் நிறுவனமாகும்.

48 வயது Khairy, 2021-2022 வரைக்குமான டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் அமைச்சரவையில் சுகாதார அமைச்சராகப் பணியாற்றியுள்ளார்.

அதற்கு முன் 2020-2021 வரைக்குமான டான் ஸ்ரீ முஹிடின் யாசின் அமைச்சரவையில், அறிவியல்-தொழில்நுட்ப-புத்தாக்க அமைச்சராகவும் அவர் இருந்துள்ளார்.

அப்போது கோவிட்-19 தடுப்பூசிகளை தருவிக்கும் முக்கியப் பொறுப்பை ஏற்று செயல்பட்ட அனுபவம் அவருக்குண்டு.

அதையெல்லாம் கருத்தில் கொண்டே Khairy-க்கு இந்த வெளிநாட்டு அங்கீகாரம் கிடைத்திருப்பதாக நம்பப்படுகிறது.

அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்தாலும் தேசிய அரங்கில் தவிர்க்க முடியாத அளவுக்கு Khairy செல்வாக்குடன் வலம் வருவது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!