
கோலாலம்பூர், ஜன 28 – அம்னோவிலிருந்து நீக்கப்பட்ட கைரி ஜமாலுடினுக்கு, இதர அரசியல் கட்சிகள், ஆதரவும் நட்புக் கரத்தையும் நீட்டியிருக்கின்றன.
அம்னோவிலிருந்து நீக்கப்பட்டு தற்போது பாஸ் கட்சியில் இணைந்திருக்கும் Arau நாடாளுமன்ற உறுப்பினர் Datuk Seri Shahidan Kassim, Bersatu கட்சியின் துணைத் தலைவர் Datuk Ahmad Faizal Azumu, Muafakat Nasional தலைவர் Tan Sri Annuar Musa ஆகியோர் , கைரிக்கு தங்களது ஆதரவு கரத்தை நீட்டியிருக்கின்றனர்.
அம்னோவிலிருந்து நீக்கப்பட்டவர்கள் பொறுமை காக்குமாறும், உங்களைத் தற்காக்க நாங்கள் இருக்கிறோம் எனவும், இனியும் உங்கள் சிறகுகள் கட்டிப் போடப்படவில்லை, இனி நீங்கள் இன்னும் உயரே பறந்து சாதனை படைக்கலாம் எனவும் அவர்கள் உற்சாக வார்த்தைகளையும் கூறியுள்ளனர்.
இதனிடையே, கோவிட் கால கட்டத்தில் மிக சிறந்த முறையில் சேவையாற்றிய அமைச்சராக பாராட்டப்பட்டவரான கைரி, தனது சொந்த கட்சியால் முறையாக நடத்தப்படவில்லை என கூறி, அவரை தங்களது கட்சியில் இணைய அழைப்பு விடுத்திருக்கின்றது கெராக்கான் கட்சி.
KJ- விற்கு கெராக்கான் சிறந்த அரசியல் தளமாக அமையமுடியுமென அக்கட்சியின் நடப்பு இளைஞர் பிரிவு தலைவர் Wong Chia Zhen கூறியிருக்கின்றார்.
பாஸ் கட்சியை அடுத்து, Perikatan Nasional கூட்டணியில் இருந்து கைரிக்கு அழைப்பு விடுத்திருக்கும் இரண்டாவது உறுப்பு கட்சியாக கெராக்கான் விளங்குகிறது.