Latestமலேசியா

கைரி தற்போது சுங்கை பூலோ அம்னோ உறுப்பினர்

கோலாலம்பூர், டிச 26 – கடந்த பொதுத் தேர்தலில் Sungai Buloh நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்ட கைரி ஜமாலுடின், தற்போது அத்தொகுதி அம்னோ உறுப்பினராக பதிவு செய்துக் கொண்டிருக்கிறார்.

அத்தொகுதியில் தோல்வி கண்டதால் , அங்கிருந்து வேறு ஒரு தொகுதிக்கு செல்லவிரும்பவில்லை. மேலும் அத்தொகுதி மக்களுக்கு அது நியாயமாகவும் இருக்காது. எனவே, ரெம்பாவ் தொகுதியிலிருந்து வெளியேறி தாம் Sungai Buloh அம்னோ தொகுதி உறுப்பினராக மாறியிருப்பதாக கைரி கூறினார்.

2008 -ஆம் ஆண்டு தொடங்கி 3 தவணைகள் ரெம்பாவ் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினராக இருந்து வந்த கைரி, 15-வது பொதுத் தேர்தலில் பக்காத்தான் ஹரப்பானின் கோட்டையான Sungai Buloh தொகுதியில் போட்டியிட்டு தோல்வி கண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!